உள்ளூர் செய்திகள்

திரவுபதியம்மன் கோவில் தேரோட்டம்

Published On 2023-08-21 11:52 IST   |   Update On 2023-08-21 11:52:00 IST
  • இலந்தைக் கூடம் கிராமத்தில் திரவுபதியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது
  • ஏராளமான பக்தர்கள் தேர் திருவிழாவில் கலந்து கொண்டு சாமி தரிசனம்

அரியலூர் 

அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த இலந்தைக் கூடம் கிராமத்திலுள்ள திரவுபதியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

இங்கு கடந்த 3 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் திருவிழா தொடங்கியது. தொடர்ந்து மகாபாரதம் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட தேரில் மலர் அலங்காரத்துடன் திரவுபதியம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.பக்தர்கள் வீடுகள் தோறும் தீபாராதனை காட்டி வணங்கி அம்மனின் அருளை பெற்றனர்.


Tags:    

Similar News