உள்ளூர் செய்திகள்

தொடர்வண்டி வேண்டுவோர் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம்

Published On 2022-08-15 07:17 GMT   |   Update On 2022-08-15 09:23 GMT
  • தொடர்வண்டி வேண்டுவோர் கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
  • கும்பகோணம்-ஜெயங்கொண்டம் வழியாக விருத்தாசலத்திற்கு ரெயில் இயக்க கோரிக்கை

அரியலூர்:

ஜெயங்கொண்டம் தொடர்வண்டி வேண்டு வோர்  கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, இணை ஒருங்கிணைப்பாளர் வக்கீல் சவுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். சாமிநாதன் வரவேற்று பேசினார். கூட்டத்தில், கும்பகோணம்-ஜெயங்கொண்டம் வழியாக விருத்தாசலத்திற்கு ரெயில் இயக்க வேண்டும் என்று கோரி வருகிற 15-ந் தேதி அனைத்து கிராம சபை கூட்டங்களிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும், என்ற முன் வடிவு ஏற்றுக்கொள்ளப்பட்டது. அந்த கோரிக்கைக்காக ஜெயங்கொண்டம், உடையார்பாளையம், ஆண்டிமடம் பகுதிகளில் உள்ள தனியார் மற்றும் அரசு கல்வி நிறுவனங்களின் நிறுவனர்கள், முதல்வர்கள் மற்றும் மாணவர்களை சந்தித்து ரெயில் கோரிக்கைக்காக மக்களை சந்திக்கும் மாபெரும் பேரணி நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. தீர்மானங்களை கூட்டமைப்பின் நிறுவனர் திருக்குறள் பன்னீர்செல்வம் முன்மொழிந்து விளக்கி பேசினார். கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வேல்முருகன், கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் வக்கீல் பழனிமுத்து, மருத்துவர் சமூக சங்கத்தின் மாநில தலைவர் குணசேகரன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்

Similar News