உள்ளூர் செய்திகள்

டீசல் பயன்பாட்டை குறைக்க கலெக்டர் அரசு பேருந்தில் பயணம்

Published On 2022-06-08 15:57 IST   |   Update On 2022-06-08 15:57:00 IST
  • மக்கள் தொடர்பு முகாமில் பங்கேற்பதற்காக அதிகாரிகளுடன் அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி இன்று அரசு பஸ்சில் பயணம் செய்தார்.
  • அரசு அதிகாரிகள் அனைத்து வாகனங்களையும் தவிர்த்து விட்டு அரசு பேருந்தில் பயணம் செய்வதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க முடியும்

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் கடம்பூர் கிராமத்தில் நடைபெறும் மக்கள் தொடர்பு முகாமில் கலந்துகொள்வதற்காக மாவட்ட கலெக்டர் ரமண சரஸ்வதி இன்று அனைத்து துறை அதிகாரிகளுடன் அரசு பேருந்தில் டிக்கெட் எடுத்து பயணம் செய்தார்.

அவர் தனது அலுவலகத்தில் இருந்து 31 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடம்பூர் கிராமத்திற்க்கு 45 நிமிடங்கள் செய்தார்.

இதுகுறித்து கலெக்டர் ரமண சரஸ்வதி கூறுகையில், அரசு பேருந்தில் பயணம் செய்யும் போது அனைத்து அதிகாரிகளும் ஒரே நேரத்தில் பயணம் செய்து ஒரு நேரத்தில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்து நிவர்த்தி செய்ய முடியும்.

அரசு அதிகாரிகள் அனைத்து வாகனங்களையும் தவிர்த்து விட்டு அரசு பேருந்தில் பயணம் செய்வதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்கவும், இது போல் பயணம் செய்வதாகவும் இது போல் இனி தொடர்ந்து மக்கள் தொடர்பு முகாமிற்கு செல்ல திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

திடீர் ஏற்பாட்டால் டிக்கட் எடுத்து பயணம் செய்வதாகவும் அடுத்த முறை துறை ரீதியாக பேசி பயணம் செய்ய திட்டமிடப்படும் என்று அவர் கூறினார்.


Tags:    

Similar News