உள்ளூர் செய்திகள்

ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம்

Update: 2022-11-29 10:08 GMT
  • ஆவின் பாலகம் அமைக்க விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • ஆதிதிராவிடர்-பழங்குடியினர்


அரியலூர்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரின் பொருளாதார வளர்ச்சியை ஊக்கப்படுத்திட மின் வாகனம் (இ-வெகிக்கில்ஸ்), உறைவிப்பான் (பிரீசர்), குளிர்விப்பான் (கூலர்) போன்ற உபகரணங்களை கொள்முதல் செய்து ஆவின் பாலகம் அமைக்க ஆதிதிராவிடர்களுக்கு திட்டத்தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.2.25 லட்சம் மானியமும், பழங்குடியினர்களுக்கு திட்டத்தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.3.75 லட்சம் மானியமும் வழங்கப்படுகிறது. இதற்கு விண்ணப்பதாரர் இந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சேர்ந்தவராகவும், வயது 18 முதல் 65 வரையிலும் இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். தாட்கோ திட்டத்தில் மானியம் எதுவும் பெற்றிருக்கக்கூடாது. ஆவின் பாலகம் அமைக்க தேர்ந்தெடுக்கப்படும் கடையின் இடம் குறைந்தபட்சம் 100 சதுர அடியாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரருக்கு சொந்த அல்லது குத்தகை அல்லது வாடகைக் கட்டிடம் இருக்கலாம். அதற்கான ஆராரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

இத்திட்டத்தில் பயன்பெற விண்ணப்பதாதரர்களின் சாதி சான்று, வருமானம் சான்று, குடும்ப அட்டை. இருப்பிட சான்று, ஆதார் அடையாள அட்டை, கல்விச் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், ஜி.எஸ்.டி.ஐ.என். உடன் கூடிய விலைப்புள்ளி மற்றும் இத்திட்டத்திற்கு கூடுதலாக தேவைப்படும் ஆவணங்களை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விண்ணப்பதாரர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள அறை எண் 225, இரண்டாவது தளம், தாட்கோ, மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் நேரில் சமர்ப்பித்து கூடுதல் விவரம் பெற்றுக்கொள்ளலாம். இந்த வாய்ப்பினை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்."

Tags:    

Similar News