உள்ளூர் செய்திகள்
மீத்தேன் திட்டத்தை கைவிட கோரிக்கை
- ஜெயங்கொண்டம் பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கைவிட கோரி தீர்மானம்
- உடையார்பாளையம் நகர அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் சங்க கூட்டத்தில் தீர்மானம்
ஜெயங்கொண்டம்,
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் நகர அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர் சங்க கூட்டம் நடைபெற்றது. சங்கத் தலைவர் பழனிவேல் தலைமை வகித்து, தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் அதிக உறுப்பினர்களை சேர்ப்பதில் முனைப்பு காட்ட வேண்டும் என கூறினார்.துணை தலைவர் கோவிந்தராசு அனைவரையும் வரவேற்று பேசினார்.கூட்டத்தில் ஜெயங்கொண்டம் பகுதியில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை அரசு கைவிட வேண்டும். ஓய்வு பெற்ற அரசு பேருந்து நடத்துனர்களுக்கு பல வருடங்களாக வழங்கப்படாமல் உள்ள டி ஏ உடனடியாக வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் நலன் காக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.