உள்ளூர் செய்திகள்

2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது

Published On 2022-08-08 12:23 IST   |   Update On 2022-08-08 12:23:00 IST
  • 2 வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்
  • கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார்.

அரியலூர்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகேயுள்ள நாயகனைபிரியாள் வடக்கு தெருவைச் சேர்ந்தவர்கள் மன்மத ராசா (வயது 22) சுமரன் (22) இருவரும் கடந்த ஜூன் மாதம் மனநலம் பாதிக்கப்பட்ட 13 வயது சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்ததாக சிறுமியின் பெற்றோர் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன் பேரில் இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் அரியலூர் எஸ்.பி. பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துயைின் பேரில் மன்மதராஜா, சுமரன் ஆகிய 2 பேரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்க கலெக்டர் ரமணசரஸ்வதி உத்தரவிட்டார். 

Tags:    

Similar News