1567 வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு
- அரியலூரில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1567 வழக்குகளுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டது
- மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு தலைவருமான கிரிஸ்டோபர் தலைமையில் நடைபெற்றது
அரியலூர்,
அரியலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் தேசிய சட்டபணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் படி, அரியலூர் மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. மாவட்ட நீதிபதியும், மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு தலைவருமான கிரிஸ்டோபர் தலைமையில் நடைபெற்ற இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 5078 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 707 சிறுகுற்ற வழக்குகளும், 19 சிவில் வழக்குகளும், 11 மோட்டார் வாகன விபத்து வழக்குகளும், 2 காசோலை வழக்குகளும், 3 குடும்ப வன்முறை வழக்குகளும், 1 பராமரிப்பு வழக்கும், ஜெயங்கொண்டத்தில் நிலம்கை யகப்படுத்துதல் 596 வழக்குகளுக்கும் தீர்வு காணப்பட்டது, இதில் குடும்பநல நீதிபதி செல்வம், தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணன், தலைமைகுற்றவியல் நடுவர் அறிவு, ஜெயங்கொண்டம் சட்டபணிகள் ஆணைக்குழு தலைவர் லதா, கூடுதல் உரிமையியல் நீதிமன்ற நீதிபதி கணேஷ், நீதித்துறை நடுவர் ராஜசேகர், செந்துறை நீதித்துறை நடுவர் ஆக்ணேஷ்ஜெயகிருபா, மாவட்ட சட்டபணிகள் ஆணைக்குழு செயலாளர் அழகேசன், அரசு வக்கில்கள், வக்கில் சங்க பிரதிநிதிகள், நீதிமன்ற அலுவலர்கள், ஊழியர்கள், சட்டஆணைக்குழு அலுவலர்கள், ஊழியர்கள் கலந்துகொண்டனர்.