உள்ளூர் செய்திகள்

மல்லையாபுரத்தில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பை அகற்ற வந்த அதிகாரிகள்.

செம்பட்டி அருகே ஆக்கிரமிப்பு அகற்ற சென்ற அதிகாரிகளுடன் பொதுமக்கள் வாக்குவாதம்

Published On 2023-04-26 06:37 GMT   |   Update On 2023-04-26 06:37 GMT
  • ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டிருந்த இடங்களை சர்வே செய்த போது ஆக்கிரமிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சர்வே பணியை தடுத்து விட்டனர்.
  • சர்வே பணியின் போது ஆக்கிரமிப்பாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது/

செம்பட்டி:

செம்பட்டி அருகே மல்லையாபுரத்தில் பொதுப்பாதை இடங்களை சிலர் ஆக்கிரமிப்புகள் செய்திருந்தனர். இதனை அகற்ற வேண்டும் என இந்த பகுதி பொதுமக்கள் அரசு அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலை யில் ஆக்கிரமிப்பாளர்கள் சர்வே பணியை தடுத்தனர்.

இதுகுறித்து செம்பட்டி போலீசில் புகார் செய்ய ப்பட்டது. இதையடுத்து மல்லையாபுரத்தில் ஆக்கிர மிப்புகள் செய்யப்பட்டிருந்த இடங்களை சர்வே செய்த போது ஆக்கிரமிப்பாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சர்வே பணியை தடுத்து விட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் மற்றும் போலீசார் பாது காப்புடன் சர்வே செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்தப் பணியில் அக்கரைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமி சக்திவேல், ஆத்தூர் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஹேமலதா, எஸ்.பாறை ப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கணேசன், சர்வேயர் ஈஸ்வரன், எஸ்.பாரைப்பட்டி ஊராட்சி மன்ற செயலர் பாலாஜி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சர்வே பணியின் போது ஆக்கிரமிப்பாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News