உள்ளூர் செய்திகள்

விழாவில் மாணவர்களுக்கு வெங்கரை பேரூராட்சித் தலைவர் விஜயகுமார் பரிசுகள் வழங்கிய போது எடுத்த படம். 

மாநில அளவில் வெற்றி பெற்ற வெங்கரை அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா

Published On 2023-03-18 15:09 IST   |   Update On 2023-03-18 15:09:00 IST
  • ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாநில, மாவட்ட, வட்டார அளவில் கல்வி சாரா மன்ற செயல்பாடுகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
  • சென்னையில் நடைபெற்ற பள்ளி சிறார் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள், அபினேஷ் கண்ணா, ஷாலினி ஆகிய இருவரும் மாநில அளவில் முதலிடம் பெற்றனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் வெங்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாநில, மாவட்ட, வட்டார அளவில் கல்வி சாரா மன்ற செயல்பாடுகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு கபிலர்மலை வட்டார கல்வி அலுவலர் சுரேஷ் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக வெங்கரை பேரூராட்சித் தலைவர் விஜயகுமார் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டி பரிசுகள் வழங்கினார். பேரூராட்சி செயல் அலுவலர் சீனிவாசன் சிறப்புரையாற்றினார்.

இதில் சென்னையில் நடைபெற்ற பள்ளி சிறார் திரைப்பட விழாவில் கலந்து கொண்ட மாணவர்கள், அபினேஷ் கண்ணா, ஷாலினி ஆகிய இருவரும் மாநில அளவில் முதலிடம் பெற்றனர். இதேபோல் பல்வேறு போட்டிகளில் மாவட்ட அளவில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், பள்ளியில் விடுமுறை எடுக்காமல் வருகை புரிந்த 11 மாணவர்களுக்கும் ஊக்கத் தொகை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. வினாடி - வினா போட்டி, கலைத் திருவிழா தனிநபர் நடனம் உள்ளிட்டவற்றில் மாவட்ட அளவில் வெற்றி பெற்றவர்கள் என 165 மாணவர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.

இவ்விழாவில் முன்னாள் வெங்கரை பேரூராட்சித் தலைவர் நித்தியகுமாரி விஜயகுமார், வார்டு கவுன்சிலர்கள், மாணவர்களின் பெற்றோர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் நரசிம்ம சிங்கார வடிவேல் நன்றி கூறினார்.

விழா ஏற்பாடுகளை வெங்கரை டவுன் பஞ்சாயத்து சேர்மன் விஜி மற்றும் பள்ளி மேலாண்மை குழு செய்திருந்தனர்.

Tags:    

Similar News