உள்ளூர் செய்திகள்

நாமக்கல் மாவட்டத்தில் மணிமேகலை விருது பெற விண்ணப்பிக்கலாம்

Published On 2023-04-04 07:35 GMT   |   Update On 2023-04-04 07:35 GMT
  • மணிமேகலை விருது வழங்குவதற்காக தமிழக அரசு ரூ. 2.10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.
  • மணிமேகலை விருது தேர்வுக்கான தகுதிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, விருதுக்கு தேர்வு செய்யப்படும் சுயஉதவிக் குழுக்கள் அ மற்றும் ஆ தரமதிப்பீடு உடையதாக இருக்க வேண்டும்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ள தாவது:-

மாநிலம் மற்றும் மாவட்ட அளவில் சிறப்பாக செயல்படும் சிறந்த சுய உதவிக்குழுக்கள், பஞ்சாயத்து அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், நகர்ப்புறங்களில் உள்ள சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு மற்றும் தொகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருது வழங்குவதற்காக தமிழக அரசு ரூ. 2.10 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

மணிமேகலை விருது தேர்வுக்கான தகுதிகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி, விருதுக்கு தேர்வு செய்யப்படும் சுயஉதவிக் குழுக்கள் அ மற்றும் ஆ தரமதிப்பீடு உடையதாக இருக்க வேண்டும். சுயஉதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டு குறைந்த பட்சம் 4 ஆண்டுகள் நிறைவடைந்திருக்க வேண்டும்.

வங்கி கடன் குறைந்தபட்சம் 3 முறை பெற்று முறையாக திருப்பி செலுத்தியிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 2 அலுவலக நிர்வாகிகளை சுழற்சி முறையில் மாற்றம் செய்திருக்க வேண்டும்.

சிறந்த ஊராட்சி அளவிலான கூட்ட மைப்பிற்காக விருது பெற, ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு அ மற்றும் ஆ தரமதிப்பீடு பெற்றிருக்க வேண்டும்.

சிறந்த கிராம வறுமை ஒழிப்பு சங்கம் விருது பெற, விண்ணப்பிக்க கிராம வறுமை ஒழிப்பு சங்கம் அ மற்றும் ஆ தரமதிப்பீடு பெற்றிருக்க வேண்டும்.

சிறந்த வட்டார அளவிலான கூட்டமைப்பு விருது பெற, சிறந்த வட்டார அளவிலான கூட்டமைப்பு அ மற்றும் ஆ தரமதிப்பீடு பெற்றிருக்க வேண்டும். வட்டார அளவிலான கூட்டமைப்பு தொடங்கப்பட்டு குறைந்தபட்சம் 1 ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும்.

சிறந்த பகுதி அளவிலான கூட்டமைப்பு விருது பெற, அ மற்றும் ஆ தரமதிப்பீடு பெற்றிருக்க வேண்டும். நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் அனைத்து சுயஉதவிக்குழுக் களும் பகுதி அளவிலான கூட்டமைப்பில் இணைந்திருக்க வேண்டும்.

சிறந்த நகர அளவிலான கூட்டமைப்பிற்கான விருது பெற, நகர அளவிலான கூட்டமைப்பு தொடங்கப்பட்டு குறைந்தபட்சம் 1 வருடம் முடிந்திருக்க வேண்டும்.

2022-2023-ம் ஆண்டிற்கு மணிமேகலை விருதிற்கு தகுதியான குழுவினர் வருகிற ஏப்.25-ம் தேதிக்குள், அதற்கான விண்ணப்பங்களை வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News