உள்ளூர் செய்திகள்

கள்ளக்குறிச்சியில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரிடம் மனு அளிக்க வந்த கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களை படத்தில் காணலாம்.

கள்ளக்குறிச்சியில் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள்: கலெக்டரிடம் மனு

Published On 2022-11-22 07:34 GMT   |   Update On 2022-11-22 07:34 GMT
  • சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
  • நாள் ஒன்றுக்கு ரூ.400 தினக்கூலி வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பணிபுரியும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமாரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியுள்ளதாவது, நாங்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம், வடக்கனந்தல், தியா கதுருகம் மணலூர்பேட்டை, சின்னசேலம் ஆகிய பேரூராட்சிகள் மற்றும் உளுந்தூர்பேட்டை, திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி ஆகிய நகராட்சிகளில் தினக்கூலி அடிப்படையில் தமிழக அரசின் டெங்கு காய்ச்சல்,மலேரியா, யானைக்கால், கொரோனா உள்ளிட்ட நோய் தடுப்புப் பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

எங்களுக்கு தினமும் நாள் ஒன்றுக்கு ரூ.289 தினக்கூலியாக வழங்குகின்றனர். இந்த பணத்தை வைத்து வாழ்க்கை நடத்த மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் எங்களைப் போன்று ஊராட்சிகளில் பணிபுரியும் கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்களுக்கு ரூ.400 தினக்கூலி வழங்கப்படுகிறது. இதே போல் எங்களுக்கும் நாள் ஒன்றுக்கு ரூ.400 தினக்கூலி வழங்க மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மேற்கண்டவாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட கலெக்டர் மனு மீது நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Tags:    

Similar News