உள்ளூர் செய்திகள்

இடிந்து விழும் நிலையில் உள்ள அங்கன்வாடி மைய கட்டிடம்

Published On 2023-04-04 15:23 IST   |   Update On 2023-04-04 15:23:00 IST
  • பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பயப்படும் நிலை உருவாகி வருகிறது.
  • தொடர்ந்து பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப வேண்டும் என்றால் கட்டிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும்

 கடத்தூர்,

தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஊராட்சி ஒன்றியம் புதுரெட்டியூர் கிராமத்தில் இயங்கி வரும் அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்து உள்ளது.

பள்ளிக்கு வரும் குழந்தைகள், பெற்றோர்கள் அச்சமடைந்து வருகின்றனர். கடத்தூர் பேரூராட்சிக்கு உட்பட்டபுது ரெட்டியூரில் சுமார் 15 குழந்தைகள் படிக்கும் அங்கன்வாடி மையம் இயங்கி வருகிறது.

இந்த மையத்தின் மேற்கூரைகள் பெயர்ந்து விழுந்து வருவதாலும், மழைக்காலங்களில் தண்ணீர் கட்டிடத்தில் ஒழுகுவதாலும் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பயப்படும் நிலை உருவாகி வருகிறது.

இந்த கட்டிடத்தை மாற்றி புதுப்பித்து தர வேண்டும் என பெற்றோர்கள் பொதுமக்கள் சார்பில் பல்வேறு முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கோரிக்கை மனு அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கும் எடுக்காமல் அலட்சியம் காட்டி வருவதாக கூறப்படுகிறது.

தொடர்ந்து பள்ளிக்கு குழந்தைகளை அனுப்ப வேண்டும் என்றால் கட்டிட வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்பது அப்பகுதியில் உள்ள பெற்றோர்கள் பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags:    

Similar News