உள்ளூர் செய்திகள்

முன்னாள் மாணவர் சந்திப்பு: நிகழ்ச்சிக்கு பள்ளி சீருடையில் வந்த 54 வயது நபர்

Published On 2024-02-04 10:32 GMT   |   Update On 2024-02-04 10:32 GMT
  • பள்ளி காலத்தில் நடைபெற்ற பசுமையான நினைவுகளை சிலாகிப்புடன் அசைபோட்டனர்.
  • பள்ளி ஆசிரியர்கள் மிகவும் நெகிழ்ச்சியோடு பழைய நினைவலைகளை மேடையில் பகிர்ந்து கொண்டனர்.

கோவை:

கோவை வின்சென்ட் ரோடு, கோட்டைமேடு பகுதியிலுள்ள நல்லஆயன் உயர்நிலைப்பள்ளியில் 1980-ம் ஆண்டு முதல் 10-ம் வகுப்புவரை படித்த முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி, போத்தனூர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

இதில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் சுமார் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்று கூடிய பழைய மாணவர்கள் மீண்டும் ஒன்றுசேர்ந்தது, பலரது முகத்திலும் நெகிழ்ச்சி, மகிழ்ச்சி, பூரிப்பை ஏற்படுத்தியது.

மேலும் அவர்கள் தங்களுக்கான அடையாளம், நட்பு, பாசத்தை ஒருவருக்கொருவர் புதுப்பித்துக் கொண்டனர். தொடர்ந்து அவர்கள்பள்ளி காலத்தில் நடைபெற்ற பசுமையான நினைவுகளை சிலாகிப்புடன் அசைபோட்டனர். மேலும் முன்னாள் மாணவர் சந்திப்புக்காக இதே பள்ளியில் கடந்த 1990-ம் ஆண்டு படித்த ஆர்.எஸ். புரத்தை சேர்ந்த கார்த்தி (வயது 54) என்பவர், கடந்த கால நினைவுகளை நினைவு கூறும் விதமாக, அன்றைய காலகட்டத்தில் நடைமுறையில் இருந்த காக்கி அரைக்கால் டவுசர் மற்றும் வெள்ளைநிற சட்டை அணிந்து பள்ளிக்கு வந்தி ருந்தார்.

இது அங்கு திரண்டு இருந்த பழைய நண்பர்கள் அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. கார்த்தி கூடலூர் பகுதியில் உள்ள கோவிலில் தலைமை குருக்களாக பணியாற்றி வருகிறார்.

முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் பங்கேற்ற பள்ளி ஆசிரியர்கள் மிகவும் நெகிழ்ச்சியோடு பழைய நினைவலைகளை மேடையில் பகிர்ந்து கொண்டனர்.

பின்னர் அவர்கள் பேசுகையில், இன்றைய தலைமுறை மாணவர்கள் இந்த நாட்டிற்காக தான் கற்ற கல்வியை பிறர் பயன்பட நடந்து கொள்ள வேண்டும் என்று உணர்வு பூர்வமாக பேசி, முன்னாள் மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

இந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் பிள மின் மரியஜோசப் உட்பட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News