உள்ளூர் செய்திகள்

ராஜா வாய்க்காலில் வீசப்பட்ட எச்சில் இலைகளை படத்தில் காணலாம். 

ராஜா வாய்க்காலில் வீசப்படும் அன்னதான எச்சில் இலைகள்

Published On 2023-05-05 06:44 GMT   |   Update On 2023-05-05 06:44 GMT
  • பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலத்தில் பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் உள்ளது.
  • அன்னதானத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளை கோவிலை ஒட்டி செல்லும் ராஜாவாக்காலில் அப்படியே அன்னதான ஊழியர்கள் வீசி விடுகின்றனர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பாண்டமங்கலத்தில் பிரசன்ன வெங்கட்ரமண சாமி கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலில், தினசரி அன்னதானம் நடக்கிறது.

குறிப்பாக சனிக்கிழமை அன்று சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்டோர் கோவிலுக்கு வந்து வழிபட்டு செல்வர். அன்றைய தினம் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அன்னதானத்தில் கலந்து கொண்டு உணவருந்தி செல்வர்.

இந்த நிலையில், இந்த அன்னதானத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் சாப்பிட்ட எச்சில் இலைகளை கோவிலை ஒட்டி செல்லும் ராஜாவாக்காலில் அப்படியே அன்னதான ஊழியர்கள் வீசி விடுகின்றனர்.

சாப்பிட்ட எச்சில் இலை மற்றும் மீதம் வைக்கப்பட்ட உணவு, பேப்பர் கப்புகள் அப்படியே தண்ணீரில் மிதந்து வருவது பார்ப்பவர்களை முகம் சுளிக்க வைக்கிறது.

எனவே பாண்டமங்கலம் கோவிலில் சேரும் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News