உள்ளூர் செய்திகள்

ரெயில் நிலையத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அருகில் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி மற்றும் பலர் உள்ளனர்.


அனைத்து கோரிக்கைகளும் நிறைவேறும்: தென்காசி மாவட்டம் சிறந்த மாவட்டமாக முன்னேறும் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உறுதி

Published On 2022-12-08 09:40 GMT   |   Update On 2022-12-08 09:40 GMT
  • தமிழகத்தின் முதல்-அமைச்சரும், நமது குடும்பத்தின் மூத்த சகோதரருமான மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார்.
  • நிறைய துறைகள் தென்காசி மாவட்டத்திற்கு வரவேண்டி உள்ளது.

தென்காசி:

தென்காசியில் இன்று நடைபெற்ற அரசு விழாவில் வருவாய் துறை அமைச்சரும், தென்காசி மாவட்ட பொறுப்பு அமைச்சருமான கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேசியதாவது:-

தமிழகத்தின் முதல்-அமைச்சரும், நமது குடும்பத்தின் மூத்த சகோதரருமான மு.க.ஸ்டாலின் தென்காசி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். இந்த மாவட்டத்தில் குற்றாலம் மிகவும் குளுமையான பகுதி. முதல்-அமைச்சரின் எண்ணத்தின்படி இன்று குளுமை அதிகமாக உள்ளது. இந்த குளுமை தொடர்ந்து மக்களுக்கு கிடைக்கும்.

இந்த குளுமை நீடிக்க வேண்டும் என்பதில் முதல்-அமைச்சர் மிகவும் அக்கறையுடன் இருக்கிறார். நமது மாவட்டம் நெல்லை மாவட்டத்தில் இருந்து பிரிந்து வந்து 2 ஆண்டுகள் ஆகி விட்டது. இன்னும் நிறைய துறைகள் தென்காசி மாவட்டத்திற்கு வரவேண்டி உள்ளது.

இங்கு சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிக்கான கோரிக்கைகளை வைத்தனர். அவை யெல்லாம் தெரியாதவரா நமது முதல்-அமைச்சர்.

நீங்கள் எம்.எல்.ஏ.க்கள் மட்டுமல்லாது சாதாரண மக்களும் கொடுக்கும் மனுக்களை படித்து பார்த்து உடனடியாக முடிவு எடுக்கிற உன்னதமான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.

நமது கோரிக்கைகள் அனைத்தும் நிச்சயமாக நிறைவேறும். பொறுப்பு அமைச்சர் என்ற முறையில் நானும், முதல்-அமைச்சருக்கு நியாபகப்படுத்தி தென்காசி மாவட்டம் சிறந்த மாவட்டமாக முன்னேற வழிவகை செய்வேன்.

ஒவ்வொரு முறையும் நான் அவரை சந்திக்க செல்லும் போது தென்காசி மாவட்டம் எப்படி இருக்கிறது என்று அன்போடு விசாரிப்பார். அவர் மிகவும் பாசத்தோடு உள்ளார். அவரது பாசம் உங்களது எதிர்காலத்தை சுபிட்சத்தை உருவாக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறனே்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News