உள்ளூர் செய்திகள்

 தருமபுரி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் பறிமுதல் செய்த ஏர் ஹாரன்களை படத்தில் காணலாம்

பஸ்களில் அதிக ஒலிகளை எழுப்பும் ஏர் ஹாரன்கள் பறிமுதல்

Published On 2023-11-01 15:50 IST   |   Update On 2023-11-01 15:50:00 IST
  • தருமபுரியில் தனியார் பஸ்களில் அதிக ஒலிகளை எழுப்பும் ஏர் ஹாரன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
  • வட்டாரப் போக்குவரத்து அலுவலர் நடவடிக்கை

 தமிழகத்தில் இயங்கும் வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பயன்படுத்துவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டுள்ளார். அதன் பேரில் தருமபுரி வட்டார போக்குவரத்து அலுவலர் தாமோதரன், போக்குவரத்து ஆய்வாளர் தரணிதரன் மற்றும் பணியார்கள் இன்று மதியம் 12 மணியளவில் தருமபுரி பஸ் நிலையத்திற்கு சென்று சோதனை நடத்தினர்.

அதில் அதிக ஒலிகளை எழுப்பும் 50க்கும் மேற்பட்ட தனியார் பஸ்களில் பொருத்தப்பட்டு இருந்த ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது;- முதல்கட்டமாக தருமபுரி பஸ் நிலையத்தில் தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்து உள்ளோம். தருமபுரி மாவட்டத்தில் இயங்கும் அனைத்து வாகனங்களிலும் சோதனை நடக்கும்.

பறிமுதல் நடவடிக்கையை மீறி தொடர்ந்து ஏர் ஹாரன்களை பயன்படுத்தும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Similar News