உள்ளூர் செய்திகள்

எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி

Published On 2022-12-18 09:45 GMT   |   Update On 2022-12-18 09:45 GMT
  • உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.
  • நர்சிங் கல்லூரியை சேர்ந்த 150 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

ஓசூர்,

ஓசூரில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், நேற்று உலக எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இதில்,செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் செயின்ட் பீட்டர்ஸ் நர்சிங் கல்லூரியை சேர்ந்த 150 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த விழிப்புணர்வு பேரணியானது, செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் தொடங்கி ஓசூர் சீதாராம் நகர் வரை சென்று அங்கு நிறைவடைந்தது.

பேரணியில், மாணவர்கள் எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றிய வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு விழிப்புணர்வு முழக்கங்களுடன் சென்றனர். இந்த பேரணியை ஓசூர் அட்கோ போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பால சண்முகம் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மருத்துவக் கல்லூரி முதன்மை அலுவலர் டாக்டர் கார்த்திக், மருத்துவ அலுவலர் டாக்டர் பார்வதி, தேவசேனா, செயல் அலுவலர் விஜயராகவன், மக்கள் தொடர்பு அலுவலர் செல்வராஜ் மற்றும், செயின்ட் பீட்டர்ஸ் நர்சிங் கல்லூரி பயிற்றுனர்கள் வீனா,விஷ்ணு குமாரி மற்றும் நர்சுகள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News