உள்ளூர் செய்திகள்
திருமணமாகி 2 வருடங்களில் தருமபுரி இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை -உறவினர்கள் மறியலால் பரபரப்பு
- உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பாக சிறுது நேரம் மறியலில் ஈடுபட்டனர்.
- ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தருமபுரி,
தருமபுரி அக்ரி நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ். இவரது மனைவி இமயா (வயது 24). இவர்களுக்கு திருமணமாகி 2 வருடங்கள்தான் ஆகிறது.
இந்நிலையில் இமயா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டதாக கிடைத்த தகவலின்பேரில் தருமபுரி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆனால் இமயாவின் தற்கொலைக்கு சந்தோஷ் தான் காரணம் என்று கூறி அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இமயாவின் உறவினர்கள் அரசு மருத்துவமனை முன்பாக சிறுது நேரம் மறியலில் ஈடுபட்டனர்.
திருமணமாகி 2 வருடங்களில் பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.