உள்ளூர் செய்திகள்
வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு
- மத்திய அரசின் 3 புதிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்ப்பு.
- 3 புதிய சட்டங்களை அமலாக்கும் மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும்.
கும்பகோணம்:
மத்திய அரசின் 3 புதிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து நேற்று கும்பகோணம் ஒருங்கி ணைந்த கோர்ட்டு வளாகம் முன்பு கும்பகோணம் வக்கீல்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு கும்பகோணம் வக்கீல் சங்க தலைவர் விவேகானந்தன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்களையும், பொது மக்களையும் பாதிக்கும் இந்திய குற்றவியல் சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் மற்றும் இந்திய குற்றவியல் நடைமுறை சட்டம் ஆகியவற்றில் திருத்தம் செய்து 3 புதிய சட்டங்களை அமலாக்கும் மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
முன்னதாக 3 புதிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருநாள் அடையாளமாக வக்கீல்கள் கோர்ட்டு பணிகளை புறக்கணித்தனர்.