உள்ளூர் செய்திகள்

கட்டிகானப்பள்ளி ஊராட்சி மின்பகர்மான மேற்பார்வையாளர் பொறியாளர் அலுவலக வளாகத்தில் மின் வினியோக பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் டாக்டர் பீலா ராஜேஷ் பார்வையிட்ட போது எடுத்த படம். அருகில் கலெக்டர் சரயு, மின் பகிர்மான மேற்பார்வை பொறியாளர் செல்வகுமார் ஆகியோர் உள்ளனர்.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு நிவாரண முகாம்களை தயார் நிலையில் வைத்திருக்க அறிவுரை

Published On 2023-09-22 15:38 IST   |   Update On 2023-09-22 15:38:00 IST
  • பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது.
  • கண்காணிப்பு அலுவலர் பீலா ராஜேஷ் தலைமை வகித்தார்.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், அரசின் முன்னோடித் திட்டங்கள் மற்றும் வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது.

இதற்கு மாவட்ட கண்கா ணிப்பு அலுவலரும், அரசின் முதன்மை செயலாளருமான டாக்டர் பீலா ராஜேஷ் தலைமை தாங்கினார். கலெக்டர் சரயு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கண்காணிப்பு அலுவலர் டாக்டர் பீலா ராஜேஷ் பேசியதாவது:-

இன்றைய கூட்டத்தில் அரசின் கலைஞர் மகளிர் உரிமை திட்டம், நான் முதல்வன் திட்டம், முதல்&அமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம், ஜல் ஜீவன் மிஷன் தட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக துறை ரீதியாக நடந்து வரும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன் பாட்டிற்கு வழங்க வேண்டும். மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலங்களில் அனைத்து தாலுகாக்களிலும் உள்ள நிவாரண முகாம்க ளுக்கு தேவையான அடிப்படை வசதிகளையும், முதல் பொறுப்பாளர்கள் விவரங்கள், உயர் மின் மோட்டார் பம்பு, டீசல் ஜெனரேட்டர், பொக்லைன் எந்திரம் ஆகியவற்றின் விபரங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள நீர் ஆதாரங்களான ஏரி, குளங்கள் கரைகளின் உறுதித் தன்மையை ஆய்வு செய்ய வேண்டும். மணல் மூட்டைகள் மற்றும் பிற உபகரணங்கள் அனைத்தும் பயன்படுத்துவதற்கு உகந்த நிலையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

 மேலும், கால்வாய்கள், நீர்நிலைகள் ஆகியவற்றை தூர்வார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். செயல்பாட்டில் இல்லாத ஆழ்துளை கிணறுகளை பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்படாத வண்ணம் எச்ச ரிக்கை பலகைகள் வைக்க வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும் போதிய அத்தியாவசிய மருந்துகள் மற்றும் ஆக்சிஜன் சிலிண்டர்கள் கையிருப்பு இருப்பதை உறுதி செய்ய வேண்டும். மழைக்காலங்களில் கால்நடை நிவாரண மையங்கள் அமைத்து, கால்நடைகளுக்குத் தேவையான ஊசி மருந்துகள், தீவனங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.

மழைக்காலங்களில் பொது மக்களுக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைத்திடவும், கழிவுநீர் கால்வாய்களின் வெள்ள நீர் தேங்காமல் வெளியேற தக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சாலைகளில் உள்ள மரங்க ளின் கிளைகள் மின் கம்பி கள் மேல் படாதவாறு மரங்க ளின் கிளைகளை வெட்டி அப்புறப்படுத்த வேண்டும். பள்ளி கட்டிடங்கள் உறுதி யுடன் இருப்பதையும், அவசர காலங்களில் நிவாரண மையமாக செயல்பட ஏது வாக அனைத்து அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டும். பலத்த காற்று மற்றும் மழையின் காரணமாக சாலை களில் விழும் மரங்களை போக்குவரத்து மற்றும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு உடனடியாக அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஓசூர் பாகலூர் சாலை, கேசிசி நகரில் உள்ள திருப்பதி மஹால், சமத்துவபுரம் சமுதாய கூடம், சூளகிரி காமன்தொட்டி அரசு உயர்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் அமைக் கப்பட்டுள்ள மழைக்கால நிவாரண முகாம்களை பார்வையிட்டார்.

மேலும், ஓசூர் ஒன்றியம், சமத்துவபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் 1 முதல் 5 -ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப் படும் காலை சிற்றுண்டி சமைக்கப்படுவதையும், மாணவர்களுக்கு வழங்கப்படுவதையும் நேரில் பார்வையிட்டு, மாண வர்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமாகவும், சுவையாகவும் வழங்கப்பட வேண்டும். சமையலறை மற்றும் மாணவர்கள் அமர்ந்து உணவு அருந்து மிடம் சுத்தமாகவும், தூய்மையா கவும் பராமரிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இதே போல பையனப் பள்ளி, கட்டிகானப்பள்ளி, பெத்ததாளப்பள்ளி ஊராட்சிகளில் ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து கலெக்டர் அலுவலக வளாகத்தில் இயங்கி வரும் கலைஞர் மகளிர் உரிமைத் திட்ட சேவை மையத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவி யாளர் (பொது) வேடியப்பன், கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், ஓசூர் மாநகராட்சி ஆணை யர் சினேகா, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, உதவி கலெக்டர் பாபு, கிருஷ்ணகிரி மின்பகிர்மான கழக மேற்பார்வை பொறி யாளர் செல்வகுமார், செயற் பொறியாளர்கள் வேலு, பழனி, உதவி செயற்பொறியாளர் கந்தசாமி, உதவி பொறியா ளர் இளையராஜா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்ட னர்.

Similar News