உள்ளூர் செய்திகள்

தியாகதுருகம் அருகே விருகாவூரில் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை குறித்து விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட கல்வி அலுவலர் ராஜூ தொடங்கி வைத்தார்.

தியாகதுருகம் பகுதியில் அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை விழிப்புணர்வு பிரச்சாரம்

Published On 2023-04-28 07:05 GMT   |   Update On 2023-04-28 07:05 GMT
  • அரசின் கல்வி சார் நலத்திட்டம் குறித்தும் வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.
  • விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கள்ளக்குறிச்சி:

தியாகதுருகம் அருகே அரசு பள்ளியில் மாண வர்கள் சேர்க்கை மற்றும் அரசின் கல்வி சார் நலத்திட்டம் குறித்தும் வாகனம் மூலம் விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி) ராஜு தலைமை தாங்கி பிரச்சார வாகனத்தை கொடி யசைத்து தொடங்கி வைத்தார். வட்டார கல்வி அலுவலர்கள் ராதா கிருஷ்ணன், செலின்மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் பாரதி வரவேற் றார். பிரச்சார வாகனம் விருகாவூர், பொரசக் குறிச்சி, ஒகையூர், ஈயனூர், அசகளத்தூர், முடியனுர் வழியாக சென்று குரூரில் முடிவடைந்தது. இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் பலரும் கலந்து கொண்டு சேர்ப்போம், சேர்ப்போம், மாணவர்களை அரசு பள்ளியில் சேர்ப்போம். ஒழிப்போம், ஒழிப்போம், குழந்தை தொழிலாளர் முறையை ஒழிப்போம். பெண்கள் நாட்டின் இரு கண்கள் என்பன உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியவாறு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் மூலம் 7 ஊராட்சிகளில் நேற்று ஒரே நாளில் 54 மாணவ- மாணவிகள் அரசு பள்ளி யில் சேர்க்கப்பட்டனர். இதில் எண்ணும் எழுத்தும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வண்ணத் தமிழன், வட்டாரவள மைய மேற்பார்வையாளர் (பொறுப்பு) அன்பழகன், இல்லம் தேடி கல்வி ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் கண்ணன், இல்லம் தேடி கல்வி தன்னார் வலர்கள், தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News