உள்ளூர் செய்திகள்

திருவதிகை விரட்டானேசுவரர் கோவிலில் நடந்த லிங்கோற்பவர் பூஜையில் கலந்து கொண்ட பக்தர்களை படத்தில் காணலாம்.

திருவதிகை வீரட்டானேசுவரர் கோவிலில் மகா சிவராத்திரி விழாவில் அதிகார நந்தி தரிசனம்

Published On 2023-02-19 13:51 IST   |   Update On 2023-02-19 13:51:00 IST
  • தொடர்ச்சியாக 24 மணிநேரமும் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
  • இசைப்பாடல்கள், வாய்ப்பாட்டு ஆகியன நடைபெற்றது.

கடலூர்:

திருவதிகை வீரட்டா னேசுவரர் கோவிலில் மகா சிவராத்திரி விழா நடைபெற்றது. இதை யொட்டி மூலவர், அம்பாள் மற்றும் பிரகார லிங்க திருமேனிக்கு 108 மூலிகை திரவியங்களால் 4 கால மகா அபிஷேகம் நடந்தது. சரக்கொன்றை நாதருக்கு சப்தநதி, பஞ்சகங்கை புண்ணிய தீர்த்தங்களால் நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை தொடர்ச்சியாக 24 மணிநேரமும் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

திருநாவுக்கரசு திரு தொண்டு அடியார்கள் கூட்டம் சார்பில் இரவு முழு வதும் சொற்பொழிவு, பரத நாட்டியம், தேவாரம், திருவாசகம், இசைப்பா டல்கள், வாய்ப்பாட்டு ஆகியன நடைபெற்றது.இன்று அதிகாலை 5.30 மணிக்கு அதி உன்னத அதிகாரநந்தி கோபுர தரிசனம் நடந்தது.விழா வுக்கான ஏற்பாடு களை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் சந்திரன், ஆய்வாளர் ஸ்ரீதேவி, செயல் அலுவலர் மகாதேவி, சிவாச்சாரியார்கள், கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Tags:    

Similar News