உள்ளூர் செய்திகள்

மல்லியங்குப்பம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி துறை கூடுதல் இயக்குனர் குமார் திடீர் ஆய்வு

Published On 2023-01-21 18:50 IST   |   Update On 2023-01-21 18:50:00 IST
  • வீட்டு வரியை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதை பார்வையிட்டார்.
  • அரசுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பெரியபாளையம்:

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், மல்லியங்குப்பம் ஊராட்சியில் தமிழக அரசின் ஊரக வளர்ச்சி துறையின் கூடுதல் இயக்குனர் குமார் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது வீட்டு வரியை ஆன்லைனில் பதிவேற்றம் செய்வதை பார்வையிட்டார்.

மேலும் நீர் நிலைகள், குடிநீர் வசதி, அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள், மக்கும் குப்பை-மக்கா குப்பை, கழிவறை வசதிகள், உறிஞ்சி குழிகள், ஊரக வளர்ச்சித் துறையின் திட்டப்பணிகள், குடிநீர் ஆதாரங்கள், மேல்நிலை நீர் தேக்க தொட்டிகள் உள்ளிட்டவைகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியின்போது, திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை செயற்பொறியாளர் ராஜவேலு, உதவி செயற்பொறியாளர் சிவசங்கரி, உதவி திட்ட அலுவலர்கள் முரளி, அனுராதா, சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குலசேகரன், அமிர்தமன்னன், ஊராட்சிமன்ற தலைவர் செல்வி பாலசுப்பிரமணி, துணைத்தலைவர் ஆறுமுகம், வட்டார வளர்ச்சி அலுவலக செயற்பொறியாளர்கள் பிரபாவதி, ஜெய்சங்கர் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News