உள்ளூர் செய்திகள்

வளர்ச்சி திட்டப் பணிகளை சேலம் கூடுதல் கலெக்டர் பாலச்சந்தர் ஆய்வு செய்தார்.

வடுகப்பட்டியில் ரூ.44 லட்சத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கூடுதல் கலெக்டர் ஆய்வு

Published On 2023-03-19 14:18 IST   |   Update On 2023-03-19 14:18:00 IST
  • விளையாட்டு மைதானத்திற்கு ரூ.8.40 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
  • வளர்ச்சி திட்டப் பணிகள் தரமாகவும் விரைந்து பணியை முடிக்குமாறு அறிவுறுத்தினார்.

சங்ககிரி:

சங்ககிரி ஒன்றியத்துக்கு உட்பட்ட வடுகப்பட்டி ஊராட்சி காஞ்சாம்புதூர் விளையாட்டு மைதானத்திற்கு ரூ.8.40 லட்சம் மதிப்பில் பேவர் பிளாக் நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், அண்ணா நகரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், 6.12 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை மற்றும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் 3.20 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலையும்,

வடுகப்பட்டியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ், ரூ.13.57 லட்சம் மதிப்பில் அங்கன்வாடி கட்டிடம் கட்டும் பணி மற்றும் அண்ணா நகரில் ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தில், ரூ.1.75 லட்சம் மதிப்பில் பைப் லைன் அமைக்கும் பணியையும், ரூ. 14,500 மதிப்பில் சமுதாய உறிஞ்சுழி அமைக்கும் பணி மற்றும் 5.60 லட்சம் மதிப்பில் சமுதாய சுகாதார வளாகம்,

தட்டாப்பட்டியில் 5.25 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் உள்ளிட்ட ரூபாய் 44 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகளை சேலம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் ஆட்சியர் பாலச்சந்தர் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது வளர்ச்சி திட்டப் பணிகள் தரமாகவும் விரைந்து பணியை முடிக்குமாறு அறிவுறுத்தினார். இந்த ஆய்வின்போது சங்ககிரி பிடிஓ முத்து, ஆணையாளர் ராஜா, வடுகப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் முத்துசாமி துணைத்தலைவர் சதீஷ்குமார், ஒன்றிய உதவி பொறியாளர்கள் ஆனந்தயுவனேஷ், மேகலா, மற்றும் பணி மேற்பார்வையாளர்கள் சசிகலா, குமார், வடுகபட்டி ஊராட்சி மன்ற கிளார்க் தனபால், வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News