உள்ளூர் செய்திகள்

சீர்காழி நகர்மன்ற கூட்டம் நடந்தது.

சீர்காழி நகராட்சியை தரம் உயர்த்த நடவடிக்கை தேவை- கூட்டத்தில் உறுப்பினர்கள் வலியுறுத்தல்

Published On 2023-09-30 09:19 GMT   |   Update On 2023-09-30 09:19 GMT
  • மழைநீர், கழிவு நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  • அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது.

சீர்காழி:

சீர்காழி நகர்மன்ற சாதாரணக்கூட்டம் நகரமன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் தலைமையில் நடைபெற்றது. ஆணையர் ஹேமலதா, துணைத்தலைவர் சுப்பராயன், பொறியாளர் குமார், நகர அமைப்பு ஆய்வாளர் மரகதம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் உறுப்பினர்கள் பேசுகையில்,

ரமாமணி (அ.தி.மு.க): சீர்காழி எரிவாயு தகணமேடை முன்பு நிர்வகித்த வந்த பாபு என்பவருக்கு வழங்கிடவேண்டும்.

ஏ.பி.எஸ். பாஸ்கரன் (தி.மு.க): சீர்காழி நகராட்சி சார்பில் 16 பேட்டரி வண்டிகள் மற்றும் டாட்டா ஏசி வாகனங்கள் குப்பை அல்ல வழங்கப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் செயல்பாட்டில் உள்ளதா? குப்பைகள் சேகரிக்கப்பட்டு எடை போடுவதை யார் கண்காணிக்கின்றனர்.

ராஜசேகரன் (தே.மு.தி.க): உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியும் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்காமல் தமிழக முதல்வரை அவமதிப்பு செய்யும் கர்நாடகா அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

சாமிநாதன் (தி.மு.க): எனது வார்டு பகுதியில் மழைநீர், கழிவு நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். வேல்முருகன் (பா.ம.க): சீர்காழி நகராட்சி கடந்த 50 ஆண்டுகளாக இதே நிலையில் உள்ளது. நகராட்சி தரம் உயர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேவதாஸ் (தி.மு.க): எனது பகுதியில் வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். கொசு மருந்து அடிக்க வேண்டும். கஸ்தூரிபாய் (தி.மு.க): எனது பகுதியில் கூடுதலாக தெரு விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும்.

தலைவர் துர்கா ராஜசேகரன்: எரிவாயு தகணமேடை அறக்கட்டளை மூலம் நிர்வகித்திட அறிவிப்பு வெளியிடப்படும். தகுதியுடைய அறக்கட்டளையினர் விண்ணப்பம் செய்து ஒப்புதல் பெற்று நிர்வகிக்கலாம். தனிநபர் மேற்கொள்ளமுடியாது. அயோத்திதாஸ் திட்டத்தின் தமிழகம் முழுவதும் ரூ.1000 கோடி நதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் எஸ்.சி, எஸ். டி பகுதி மக்கள் அதிகமாக வாழும் பகுதிகளில் குடிநீர், தெரு விளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து அந்தந்த பகுதியை சேர்ந்த உறுப்பினர்கள் பணிகளை தேர்வு செய்து எழுத்துப் பூர்வமாக கொடுக்க வேண்டும் என்றார்.

முன்னதாக சீர்காழி நகர மன்ற கூட்ட அரங்கில் சி.சி.டி.வி கேமரா வைப்பதற்கு நகர மன்ற உறுப்பினரிடம் நகர சபை தலைவர் முன் அனுமதி பெறவில்லை. பொருத்தப்பட்டுள்ள கேமராக்களின் விலை மதிப்பு கூடுதலாக உள்ளது. இந்தப் பணிகள் தரம் இல்லைஎனக்கூறியும், செய்யாத பணிகளை மன்ற பொருளில் வைத்து மக்கள் வரிபணத்தை வீணடிப்பதாகவும் குற்றம் சாட்டி நகர்மன்ற உறுப்பினர்கள் தி.மு.க.வை சேர்ந்த ரம்யா, வள்ளி , ரேணுகாதேவி, அ.தி.மு.க.வை சேர்ந்த ரமாமணி, முழுமதி, பாலமுருகன், நித்யா தேவி, சூரிய பிரபா, கலைச்செல்வி, ராஜேஷ் ஆகிய 10 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Tags:    

Similar News