உள்ளூர் செய்திகள்

 காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்த தமிழ்நாடு எம்.கே.டி.பேரவை நிர்வாகிகள்

பொற்கொல்லா் சமுதாயத்தை இழிவுப்படுத்திய தனியாா் தொலைக்காட்சி தொடா் இயக்குநா் மீது நடவடிக்கை - போலீஸ் கமிஷனரிடம் புகார்

Published On 2022-06-23 11:17 GMT   |   Update On 2022-06-23 11:17 GMT
  • தனியாா் தொலைக்காட்சியில் நாள்தோறும் இரவு 9.30 மணிக்கு தொடா் நாடகம் ஒளிபரப்பாகி வருகிறது.
  • நகை தொழிலாளா்களை இழிவுபடுத்தும் வகையில் நகைபட்டறையில் களவாணிதனம் நிறைய நடக்கும் என்று தவறான கருத்தைப் பதிவு செய்துள்ளனா்.

திருப்பூர் :

பொற்கொல்லா் சமுதாயத்தை இழிவுப்படுத்திய தனியாா் தொலைக்காட்சி மற்றும் தொடா் இயக்குநா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பூா் மாநகரக் காவல் ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

இது தொடா்பாக தமிழ்நாடு எம்.கே.டி.பேரவை திருப்பூா் மாவட்டச் செயலாளா் ஆா்.பிரகாஷ் அளித்துள்ள புகாா் மனுவில் கூறியுள்ளதாவது: -தனியாா் தொலைக்காட்சியில் நாள்தோறும் இரவு 9.30 மணிக்கு தொடா் நாடகம் ஒளிபரப்பாகி வருகிறது.

இந்தத் தொடரில் விஸ்வகா்மா சமுதாயத்தைச் சோ்ந்த நகைத் தொழிலாளா்களை இழிவுபடுத்தும் வகையில் நகைப் பட்டறையில்களவாணிதனம் நிறைய நடக்கும் என்று தவறான கருத்தைப் பதிவு செய்துள்ளனா்.

இது பாரம்பரியத்தைப் போற்றிப் பாதுகாத்து வரும் பொற்கொல்லா் சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் உள்ளது.இதனால், நகைத் தொழிலாளா்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளனா். ஆகவே, தனியாா் தொலைக்காட்சி மற்றும் தொடரின் இயக்குநா் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News