உள்ளூர் செய்திகள்

பொதுஅமைதிக்கு இடையூறாக செயல்பட்டுவந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த 6 ரவுடிகள் கைது

Published On 2022-10-09 15:01 IST   |   Update On 2022-10-09 15:01:00 IST
  • போலீசார் அதிரடி நடவடிக்கையாக கைது செய்து வருகின்றனர்.
  • 6 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி.

தமிழகம் முழுவதும் போலீசார் அதிரடி நடவடிக்கையாக கைது செய்து வருகின்றனர்.அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கும், பொது அமைதிக்கும் குந்தகம் வகையில் செயல்பட்டு வந்த 6 ரவுடிகளை கைது செய்துள்ளனர்.

அவர்கள் பற்றிய விபரம் வருமாறு:

தேன்கனிக்கோட்டை அருகேயுள்ள கோடிச்சிப்பள்ளி பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (வயது 27), கிருஷ்ணகிரி தாலுகா பகுதியை சேர்ந்த கார்த்திக் (எ ) ரொனால்டு கார்த்திகேயன் (29), ஊத்தங்கரை பாரதிபுரம் பகுதியை சேர்ந்த ராஜ்பாய் (எ) நித்யகுமார் (46), கிருஷ்ணகிரி டேம் பகுதியில் உள்ள கோணிக்கொட்டாய் உமாசங்கர் (28), நாகரசம்பட்டி அருகேயுள்ள ராமர் கொட்டாய் பகுதியை சேர்ந்த சேகர் (56), ஓசூர் ஹட்கோ அருகேயுள்ள அலசநத்தம் முனி (31) .

மேற்கண்ட 6 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Similar News