உள்ளூர் செய்திகள்

நண்பர்களுடன் காரில் சென்றபோது விபத்து:கல்லூரி மாணவர் பலி

Published On 2023-01-23 15:12 IST   |   Update On 2023-01-23 15:12:00 IST
  • சாலை நடுவே இருந்த தடுப்பு கட்டையில் கார் மோதி விபத்துக்குள்ளானது.
  • இம்ரானை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

தருமபுரி, 

தருமபுரி மாவட்டம் அரூர் கீழ் பாட்சா தெருவை சேர்ந்தவர் பாபு. இவரது மகன் இம்ரான் (வயது 19). கல்லூரி மாணவர்.இவர் தனது நண்பர்கள் சிலருடன் ஒரு காரில் நேற்று சேலம் நோக்கி சென்றுள்ளார். சொக்கராபட்டி சாலையில் கார் சென்றபோது முன்னால்ஒரு லாரி சென்றது.

காரை ஒட்டி சென்ற இம்ரான் அந்த லாரியை முந்தி செல்ல முயன்றார். அப்போது நிலைதடுமாறிய கார் சாலை நடுவே இருந்த தடுப்பு கட்டையில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் இம்ரானுக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது.

அவரை உடனே மீட்டு தருமபுரி தனியார் மருத்துவமனையில் சேர்த்து முதலுதவி அளித்தனர். பின்னர் சேலத்தில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு இம்ரானை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இந்த விபத்து குறித்து கோபிநாதம்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News