உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

வெளிநாடு வேலைக்கு செல்பவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தல்

Published On 2022-11-24 10:38 IST   |   Update On 2022-11-24 10:38:00 IST
  • ஆன்லைன் மூலமாக சட்டவிரோதமான செயல்களை ஐ.டி.துறையில் திறமைமிக்கவர்களை குறிவைத்து ஏமாற்றுகின்றனர்.
  • வெளிநாட்டுக்கு இளைஞர்களை அனுப்பி வைக்கும் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட கலெக்டர் எச்சரித்துள்ளார்.

தேனி:

வெளிநாடு வேலைக்கு செல்பவர்கள் மத்தியஅரசின் பதிவு பெற்ற முகவர்களை அணுகி வேலைக்கான விசா, பணிவிபரம், பணி ஒப்பந்தம் ஆகியவற்றை சரிபார்த்து கொள்ள வேண்டும். போலி முகவர்கள் ஆன்லைன் மூலமாக சட்டவிரோதமான செயல்களை ஐ.டி.துறையில் திறமைமிக்கவர்களை குறிவைத்து ஏமாற்றுகின்றனர்.

சமூகவலைதளங்களில் வரும் போலியான விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம். டூரிஸ்ட் விசாவில் வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பணிகள் குறித்த விபரங்கள் தெரியாவிடில் தமிழக அரசு அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்ந்து கொண்டு உண்மை தன்மையினை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

மேலும் சட்டவிேராதமாக வெளிநாட்டுக்கு இளைஞர்களை அனுப்பி வைக்கும் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் எச்சரித்துள்ளார்.

Tags:    

Similar News