உள்ளூர் செய்திகள்

வெள்ளிப்படிச் சட்டத்தில் வீதிஉலா நடந்தது.

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர சப்த பிரதட்சணம்

Published On 2022-08-02 10:13 GMT   |   Update On 2022-08-02 10:13 GMT
  • ஆடிப்பூர அம்மனுக்கு வளையலங்காரம் ஆராதனை மற்றும் வெள்ளிப்படிச் சட்டத்தில் வீதிஉலா நடந்தது.
  • கயிலை வாத்திய இசை முழக்கங்களுடன் அம்மன்கோவில் வெளிப்பிர–காரத்தில் பக்தர்கள் ஏழுமுறை வலம் வந்து வழிபட்டார்கள்.

திருவையாறு:

திருவையாறு ஐயாறப்பர் கோவிலில் ஆடிப்பூர விழாவை முன்னிட்டு ஆடிப்பூர அம்மனுக்கு வளையலங்காரம் ஆராதனை மற்றும் வெள்ளிப்படிச் சட்டத்தில் வீதிஉலா நடந்தது. இரவு சப்த பிரதட்சணம் நடந்தது.

இதில் ஆடிப்பூர அம்மன் முன்னே வர, சிவனடியார்கள் தேவாரம், திருவாசகம் திருமுறைகள் பாடியவாறும், வேத விற்பன்னர்கள் வேதபா ராயணம் பாடியவாறும். தவில், நாதஸ்வரவித்வா ன்களின் மேள தாள இசையுடனும், கயிலை வாத்திய இசை முழக்கங்க ளுடனும் பரதநாட்டியம், ஆன்மீக இன்னிசை பாடல்க ளுடனும் அம்மன்கோயில் வெளிப்பிர–காரத்தில் பக்தர்கள் ஏழுமுறை வலம் வந்து வழிபட்டார்கள். விழாவிற்கான ஏற்பாடுகளை திருவையாறு ஐயாறப்பர்கோயில் நிர்வாகிகள் செய்திருந்தார்கள்.

Tags:    

Similar News