ஆதார் சேவை முகாம் நடைபெற்றபோது எடுத்தபடம்.
சுரண்டை அருகே ஆதார் சேவை முகாம்
- முகாமில், பிறந்த தேதி, பாலினம் போன்றவற்றை திருத்தம் செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்பட்டன.
- ஆதார் சேவை முகாமில், 350-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்பெற்றனர்.
சுரண்டை:
சுரண்டை கருவந்தா ஆர்.சி. கோவில் வளாகத்தில் 3 நாட்கள் நடந்த ஆதார் சேவை முகாமில், குழந்தைகளுக்கான புதிய ஆதார் அட்டை எடுத்தல், 5 முதல் 15 வயது வரையிலான குழந்தைகளுக்கான கைரேகை மற்றும் கருவிழி பதிவுகளை மேற்கொள்ளுதல், பெயர், முகவரி, செல் நம்பர், பிறந்த தேதி, பாலினம் போன்றவற்றை திருத்தம் செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் 350-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்பெற்றனர்.
முகாமில் போஸ்ட் மாஸ்டர்கள் தனுசியா, ஞான துரை, ஆய்வாளர் வேதமாணிக்கம், ஓவர்சியர் கள் முத்துராஜ், கணேசன், அலுவலகப் பணியாளர்கள் கலையரசன், கார்த்தி, சேகர், பிச்சை பாண்டி ஆகியோர் கலந்து கொண்டு ஆதார் சேவைகளை வழங்கினர்.
முகாம் ஏற்பாடுகளை கருவந்தா பஞ்சாயத்து தலைவர் தானியேல், துணைத்தலைவர் மங்களம் மற்றும் உறுப்பினர்கள் செய்து இருந்தனர்.