உள்ளூர் செய்திகள்

வாலாஜாபாத் ரெயில் நிலையத்தில் ரெயில் பெட்டி மீது ஏறிய வாலிபர் உடலில் தீப்பிடித்து கருகி பலி

Published On 2022-12-06 12:59 IST   |   Update On 2022-12-06 12:59:00 IST
  • வாலிபர் ரெயில் பெட்டி மீது ஏறி நின்றபடி அருகில் சென்ற மின்கம்பியை பிடித்தார்.
  • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

காஞ்சிபுரம்:

வாலாஜாபாத்தில் உள்ள ரெயில் நிலையத்தில் ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் பகுதிகளில உள்ள தொழிற்சாலைகளில் தயார் செய்யப்படும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களை நாடு முழுவதும் ஏற்றி செல்ல சரக்கு ரெயில் முனையம் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று இரவு வாலாஜாபாத் ரெயில் நிலையத்தில் சரக்கு ஏற்றி செல்வதற்காக ரெயில் நிறுத்தப்பட்டு இருந்தது. அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் திடீரென சரக்கு ரெயில் மீது சரசரவென ஏறினார். இதனை கண்ட அங்கிருந்த ஊழியர்கள் மற்றும் ரெயில் பயணிகள் கூச்சலிட்டனர். அந்த நேரத்தில் வாலிபர் ரெயில் பெட்டி மீது ஏறி நின்றபடி அருகில் சென்ற மின்கம்பியை பிடித்தார்.

இதில் அவர் வாலிபரின் உடல் முழுவதும் தீப்பற்றிஎரிய தொடங்கியது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அங்கிருந்தவர்கள் பதறியபடி கூச்சலிட்டனர். இதற்குள் தீ மளமளவென பரவி அந்த வாலிபர் உடல் கருகி சில நிமிடங்களிலேயே பரிதாபமாக உயிரிழந்து போனார்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும், செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் மற்றும் காஞ்சிபுரம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். உடல் கருகிய வாலிபரின் உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பலியான வாலிபர் யார்? மன நலம் பாதிக்கப்பட்டவரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் செங்கல்பட்டு ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News