கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்க துப்பாக்கியுடன் வந்த பெண்ணை படத்தில் காணலாம்.
சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு துப்பாக்கியுடன் வந்த பெண்
- ஏற்காடு அசம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவர் அனுமதி பெற்று துப்பாக்கி வைத்திருந்தார்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் இறந்து விட்ட தால் அந்த துப்பாக்கியை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
சேலம்:
சேலம் மாவட்டம் ஏற்காடு அசம்பூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவர் அனுமதி பெற்று துப்பாக்கி வைத்திருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் இறந்து விட்ட தால் அந்த துப்பாக்கியை மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கும்படி அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இதை அடுத்து இன்று காலை பழனிவேல் மனைவி பார்வதி, சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு ஒரு காரில் துப்பாக்கியுடன் வந்தார். அப்போது கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் போலீ சார் சோதனை செய்தனர்.
காருக்குள் துப்பாக்கி இருந்ததை அறிந்த போலீ சார் அதனை வெளியே எடுத்து சோதனை செய்த னர். தொடர்ந்து பார்வ தியிடம் விசாரித்தபோது அவர் துப்பாக்கியை ஒப்ப டைக்க வந்ததாக கூறினார்.
இதை அடுத்து துப்பாக்கி ஒப்படைக்கும் நடவடிக்கை யில் அவர் ஈடுபட்டார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் கலெக்டர் அலுவல கத்தில் பரபரப்பு நிலவியது.