உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்.
கம்பத்தில் கஞ்சா விற்ற பெண் கைது
உலகத்தேவர் தெருவில் ரோந்து பணிக்கு சென்றபோது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தது தெரிய வந்தது.
கம்பம்:
கம்பம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ் பெக்டர் விஜய் ஆனந்த் தலைமையில் போலீசார் இந்திராதேவி, ரமேஷ் ஆகியோர் உலகத்தேவர் தெருவில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தனர்.
அப்போது அதே பகுதியைச் சேர்ந்த மாயி மனைவி ஈஸ்வரி (வயது 45) என்பவர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டு இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.