உள்ளூர் செய்திகள்

சமூக வலைதளத்தில் ஆபாச படத்தை வெளியிடுவதாக கூறி கல்லூரி மாணவியை மிரட்டி நகையை பறித்த வாலிபர்

Published On 2023-09-25 16:11 IST   |   Update On 2023-09-25 16:11:00 IST
  • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  • கடந்த ஜனவரி மாதம் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளம் மூலம் அறிமுகம் ஆனார்.

புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு மாதவரம் தட்டாங்குளம் ரோட்டை சேர்ந்த சந்திப் சோலாங்கி (23) என்பவர் கடந்த ஜனவரி மாதம் இன்ஸ்டாகிராம் சமூகவலைதளம் மூலம் அறிமுகம் ஆனார்.

இதனால் இருவரும் நெருங்கி பழகினர். இந்த நிலையில் மாணவியிடம் அவரது புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூகவலைதளத்தில் பரப்புவதாக சோலாங்கி மிரட்டல் விடுத்து 10 பவுன் நகை வாங்கியதாக தெரிகிறது.

மேலும் அவர் தொடர்ந்து மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து மாணவியின் தந்தை புது வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News