உள்ளூர் செய்திகள்
படப்பை அருகே 25 அடி உயர செல்போன் கோபுரத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
- பேரிஞ்சம்பாக்கம் மெயின் ரோட்டில் சுமார் 25 அடி உயரத்தில் தனியார் செல்போன் கோபுரம் உள்ளது.
- செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரிய வில்லை.
ஸ்ரீபெரும்புதூர்:
படப்பை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள கூழாங்கள்சேரி பகுதி, பேரிஞ்சம்பாக்கம் மெயின் ரோட்டில் சுமார் 25 அடி உயரத்தில் தனியார் செல்போன் கோபுரம் உள்ளது.
இதில் சுமார் 25வயது மதிக்கத்தக்க வாலிபர் தூக்கில் பிணமாக கிடந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சோமங்களம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
செல்போன் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்று தெரிய வில்லை.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் படப்பை, சோமங்கலம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதியில் மாயமானவர்கள் பற்றிய விபரத்தையும் சேகரித்து விசாரித்து வருகிறார்கள்.