உள்ளூர் செய்திகள்

கடையின் முகப்பு பகுதி தீப்பிடித்து எரிந்தது.

கும்பகோணத்தில், பிரபல ஜவுளிக்கடையில் 'திடீர்' தீவிபத்து

Published On 2023-08-14 10:05 GMT   |   Update On 2023-08-14 10:05 GMT
  • 50 அடி உயரத்திற்கு மேல் தீ பரவியது.
  • இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

கும்பகோணம்:

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் பிரபல ஜவுளி கடை இயங்கி வருகிறது. இங்கு 500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று மாலை கடையின் முகப்பு பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த தீ மள,மளவென பரவிய தால் முகப்பின் வட பகுதி முழுவதும் கொழுந்து விட்டு எரிந்தது. அப்போது கடையில் இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்கள் அலறி அடித்து கொண்டு வெளியே ஓடினர்.

இதுகுறித்து தகவலறிந்த கும்பகோணம் கிழக்கு போலீசார் மற்றும் கும்பகோணம், திருவிடை மருதூர் தீயணைப்பு துறையினர் 3-க்கும் மேற்பட்ட வாகனங்களில் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின், தண்ணீரை பீய்ச்சி அடித்து, சுமார் 1 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 50 அடி உயரத்திற்கு மேல் தீ பரவியதால் சுமார் 3 கி.மீட்டர் தூரத்திற்கு புகை மூட்டமாக காட்சியளித்தது. இதனால் அப்பகுதியில் மின்சாரம் துண்டிக்க ப்பட்டது.

மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News