உள்ளூர் செய்திகள்

கோடகன் கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி தி.மு.க. மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்த காட்சி.

நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு உடல் முழுவதும் போஸ்டர்களை கட்டிக் கொண்டு வந்த சமூக ஆர்வலர்

Published On 2023-07-24 09:13 GMT   |   Update On 2023-07-24 09:13 GMT
  • பொதுமக்கள் கடந்து செல்லும் பாதை எங்கும் போஸ்டர் மயமாக காட்சியளிக்கிறது.
  • வடிவம்மாள் என்ற 80 வயது மூதாட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு கண்ணீருடன் வந்தார்.

நெல்லை:

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் கார்த்திகேயன் பொது மக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

நெல்லை சந்திப்பு பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார் அளித்த மனுவில் கூறி யிருப்பதாவது:-

கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் மற்றும் அரசு பள்ளி சுவர்கள், தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள ஓட்டுப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பு அறை, பஸ் நிலைய சுவர்கள், பொதுமக்கள் கடந்து செல்லும் பாதை எங்கும் போஸ்டர் மயமாக காட்சியளிக்கிறது.

இவை வாகனத்தில் செல்வோர்களின் கவனத்தை திசை திரும்பி விபத்துக்கள் உண்டாக காரணமாக அமைந்து விடுகிறது. இதேபோல் நெடுஞ் சாலைகளில் சாலைகளில் நடுவில் வைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர்களிலும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு விடுகிறது. எனவே உடனடியாக அரசு இதில் தலையிட்டு கல்விக் கூடங்கள், நெடுஞ்சாலைகள் உட்பட பல்வேறு இடங்களில் அரசு உத்தரவை மீறி போஸ் டர்கள் ஓட்டும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி யிருந்தார்.

முன்னதாக பொது இடங்களில் போஸ்டர் ஓட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நூதனமான முறையில் அவர் தனது உடலில் போஸ்டர்களை சுற்றி கட்டி மனு அளிக்க வந்ததால் பரபரப்பாக காணப்பட்டது.

தொடர்ந்து பாபநாசம் அணையில் இருந்து கோடகன் கால்வாய் வழி யாக கார் சாகுபடி பணிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய மாவட்ட தி.மு.க. பொறுப்பா ளர் மைதீன்கான் தலைமை யில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

இதில் மாநில வர்த்தக அணி துணை அமைப்பாளர் மாலைராஜா, மாநகர இளைஞரணி அமைப்பாளர் கருப்பசாமி கோட்டையப்பன், ஒன்றிய செயலாளர் மாரியப்பன், வெள்ளாளங்குளம் பஞ்சா யத்து தலைவர் மகாராஜன், மானூர் தெற்கு ஒன்றிய செயலாளர் கல்லூர் மாரியப்பன், முன்னாள் மாவட்ட பொருளாளர் அருண்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதில் பாளை கக்கன் நகர் அம்மன் கோவில் தெருவில் வசித்து வரும் வடிவம்மாள் என்ற 80 வயது மூதாட்டி கலெக்டர் அலுவலகத்திற்கு கண்ணீருடன் வந்தார். அவர் கலெக்டரிடம் அளித்த மனுவில் எனது கணவரும், மகனும் இறந்து விட்டார்கள் தற்போது எனது பேரன் என்னிடம் இருந்த 3 ஆயிரம் பணத்தை திருடி கொண்டு சென்று விட்டான். மேலும் அவன் என்னை அடித்து துன்புறுத்துகிறான். எனவே எனக்கு உதவி செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

உடல் முழுவதும் போஸ்டர்கள் கட்டி கொண்டு வந்த சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார்.

உடல் முழுவதும் போஸ்டர்கள் கட்டி கொண்டு வந்த சமூக ஆர்வலர் கிருஷ்ணகுமார்.


 


Tags:    

Similar News