உள்ளூர் செய்திகள்

போலீஸ் கமிஷனர் பாபு பாெதுமக்களிடம் மனுக்களை பெற்றதை படத்தில் காணலாம்.

மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைத்தீர்க்கும் கூட்டம் கமிஷனர் ஏ.ஜி. பாபு நேரடியாக மனுக்களை பெற்றார்

Published On 2022-06-16 11:42 GMT   |   Update On 2022-06-16 11:42 GMT
  • போலீஸ் கமிஷனர்பாபு தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
  • மொத்தம் 15 மனுக்கள் பெறப்பட்டது.

திருப்பூர் :

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் போலீஸ் துறை மானிய கோரிக்கையில், ஒவ்வொரு மாவட்டத்திலும்போலீசார் குறைகேட்பு கூட்டம்நடத்த வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.அதன்படி திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மாதம் முதல் மற்றும் மூன்றாவது புதன்கிழமை குறைகேட்பு கூட்டம்நடத்தப்படுகிறது. நேற்று நடந்த கூட்டத்துக்கு போலீஸ் கமிஷனர்பாபு தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்தனர். அதன்படிமொத்தம் 15 மனுக்கள் பெறப்பட்டது. இருவாரங்களுக்குள்உரியநடவடிக்கை எடுப்பதாக,மனுதாரர்களிடம் தெரிவிக்கப்பட்டது.இந்த கூட்டத்தில் துணை கமிஷனர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News