உள்ளூர் செய்திகள்

உயிர் பலி வாங்க காத்திருக்கும் மின்கம்பம்

Published On 2023-02-01 15:27 IST   |   Update On 2023-02-01 15:27:00 IST
  • மின் கம்பம் ஒன்று சிதலமடைந்து எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடும் நிலையில் உள்ளது.
  • விபத்து ஏற்படும் முன் இந்த கம்பம் மாற்றி அமைக்கப்படுமா என கிராம மக்கள் கேள்வி எழுப்பினர்.

பாப்பாரப்பட்டி,

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த பாப்பாரப்பட்டி அருகே உள்ள மாக்கனூர் கிராமத்தில் சுமார் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் மாரியம்மன் கோவில் தெருவில் மின் கம்பம் ஒன்று சிதலமடைந்து மிகவும் ஆபத்தான நிலையிலும் எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடும் நிலையில் உள்ளது.

இதனைக் கண்ட அப்பகுதி கிராம மக்கள் அந்த மின் கம்பத்திற்கு செங்கல் மற்றும் கற்கள் கொண்டு மின் கம்பம் சாயாதவாறு முட்டுக்கொடுத்து உள்ளனர்.

ஊரின் நடுவே அமைந்துள்ளதால் மின் கம்பம் சாய்ந்து பெரும் விபத்து ஏற்படும் முன் இந்த கம்பத்தை மாற்றி அமைக்கப்படுமா என இந்த கிராம மக்கள் கேள்வி எழுப்பினர்.

மேலும் இந்தக் மின் கம்பத்தால் அசம்பாவிதம் ஏற்படும் முன் கம்பத்தை மாற்றி தரும்படி கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News