உள்ளூர் செய்திகள்

முதல்-அமைச்சருக்கு தபால் அனுப்பும் போராட்டம்

Published On 2023-05-01 13:52 IST   |   Update On 2023-05-01 13:52:00 IST
  • தி.மு.க., அரசு சமூகநீதிக்கான அரசு, இது பெரியார் மண் என தி.மு.க., கூறுவது பொய்.
  • தி.மு.க., அரசு வன்னியர்களுக்கான, 10.5 சதவீத ஒதுக்கீட்டை விரைந்து பெற்று தர வேண்டும்.

தருமபுரி,

தருமபுரி தலைமை அஞ்சல் நிலையத்தில் வன்னியர்களுக்கு, 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி, தருமபுரி எம்.ஜி.ஆர். குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள், தருமபுரி பா.ம.க., முன்னாள் எம்.பி., செந்தில் தலைமையில், முதல்-அமைச்சர் ஸ்டாலின் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் ஆணையர் பாரதிசானுக்கு மனு எழுதி தபால் அனுப்பினார்கள்.

அப்போது, முன்னாள் எம்.பி., செந்தில், நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒரு நல்ல அரசு என்பது மக்களின் தேவையை அறிந்து செய்ய வேண்டும். ஆனால், வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீட்டுக்கு பல முறை தி.மு.க., அரசிடம் கோரிக்கை விடுத்தும் அதை நிறைவேற்றாமல் உள்ளது.

தி.மு.க., அரசு சமூகநீதிக்கான அரசு, இது பெரியார் மண் என தி.மு.க., கூறுவது பொய். ஒரு சமூகத்துக்கான இட ஒதுக்கீடு வழங்க முடியாத இந்த அரசு எப்படி சமூக நீதிக்கான அரசாக இருக்க முடியும். பெரியார் மண் என்று எப்படி சொல்லாம். தி.மு.க., அரசு வன்னியர்களுக்கான, 10.5 சதவீத ஒதுக்கீட்டை விரைந்து பெற்று தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது, எம்.ஜி.ஆர்., நகர் குடியிருப்பு சங்க நிர்வாகி குமரன், தருமபுரி பா.ம.க., நகர செயலாளர்கள் வெங்கடேஷன், சத்தியமூர்த்தி, இளைஞர் அணி செயலாளர் குமரன், ஜெய்கணேஷ் உட்பட, பலர் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News