உள்ளூர் செய்திகள்
மோட்டார் சைக்கிளில் சென்றவர் லாரியில் மோதி பலி
- நேற்று இரவு கருப்பூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் தாத காப்பட்டிக்கு புறப்பட்டார்.
- சேலம் கந்தம்பட்டி மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
சேலம்:
சேலம் தாதகாப்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் (வயது 50). இவர் நேற்று இரவு கருப்பூரில் இருந்து மோட்டார் சைக்கிளில் தாத காப்பட்டிக்கு புறப்பட்டார்.
சேலம் கந்தம்பட்டி மேம்பாலத்தில் வந்து கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மோதியது.
இதில் படுகாயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். தகவல் அறிந்த செவ்வாய்ப்பேட்டை போலீ சார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்.
பின்னர் சுந்தர்ராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். உறவினர்கள் சுந்தர்ராஜன் உடலை பார்த்து கதறி அழுதனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் விசா ரணை நடத்தி வருகிறார்கள்.