உள்ளூர் செய்திகள்

உலிக்கல் பேரூராட்சியில் நிரந்தர செயல் அலுவலரை நியமிக்க வேண்டும்

Published On 2023-08-06 09:10 GMT   |   Update On 2023-08-06 09:10 GMT
  • தற்போது உள்ள செயல் அலுவலர் 2 பேரூராட்சிகளில் பணியாற்றுகிறார்.
  • பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது.

ஊட்டி,

நீலகிரி மாவட்டம் உலிக்கல் பேரூராட்சியில் பல ஆண்டுகளாக நிரந்தர செயல் அலுவலர் இல்லாததால் மக்கள் பணிகள் நிறைவடையாமல் உள்ளது.

மேலும் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. தற்போது உள்ள செயல் அலுவலர் 2 பேரூராட்சிகளில் பணியாற்றுகிறார். அவர் பெரும்பாலும் கீழ் குந்தா அலுவலகத்திலேயே உள்ளதால் பொதுமக்கள் தங்களது குறைகளை செயல் அலுவலரிடம் கூற 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீழ்குந்தா பேரூராட்சி அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

எனவே பொதுமக்களின் பணிகளை விரைந்து முடிக்கவும், அவர்களுக்கு உரிய பிறப்பு இறப்பு சான்றிதழ் வழங்கவும் உடனடியாக உலிக்கல் பேரூராட்சி பகுதிக்கு நிரந்தர செயல் அலுவலர் பணிமடுத்தப்பட வேண்டும்.

காலதாமதம் ஏற்பட்டால் அ.தி.மு.க சார்பாக 12-வது வார்டு உறுப்பினர் பாஸ்கரன் தலைமையில் பல கட்ட போராட்டங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக வார்டு உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News