உள்ளூர் செய்திகள்

கூழாங்கல் ஏற்றி வந்த லாரியை படத்தில் காணலாம்.

உளுந்தூர்பேட்டை அருகே அனுமதி இன்றி குழாங்கற்கள் ஏற்றி வந்த லாரி பறிமுதல்

Published On 2022-12-31 14:16 IST   |   Update On 2022-12-31 14:16:00 IST
  • அனுமதி பெறாமல் லாரி மூலம் ஜல்லி ஏற்றிக்கொண்டு வருவதாக கிடைத்தது.
  • லாரி டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டார்.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா சேர்ந்த நாடு அருகே உள்ள கள்ள மேடு பகுதியில் இருந்து அனுமதி பெறாமல் லாரி மூலம் ஜல்லி ஏற்றிக்கொண்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் விழுப்புரம் சுரங்கத்துறை உதவி புவியியலாளர் அருள்முருகன் சம்பவ இடத்திற்கு சென்றார். மேப்புலியூர் என்ற இடத்தில் லாரியை அவர் மடக்கி பிடித்தார். லாரி டிரைவர் லாரியை நிறுத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து ஓடி விட்டார். லாரியை அங்கிருந்து எடுத்துக்கொண்டு உளுந்தூர்பேட்டை போலீசில் ஒப்படைக்கப்பட்டது. இது தொடர்பாக உளுந்தூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழ்வாணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News