உள்ளூர் செய்திகள்

மனைவி வேறு ஒருவரை திருமணம் செய்ததால் உயிரை மாய்த்த கணவர்

Published On 2023-06-02 15:03 IST   |   Update On 2023-06-02 15:03:00 IST
  • மனைவி வேறு ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு சென்று விட்டார்.
  • ஏரி வேப்பமரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

ராயக்கோட்டை,

கிருஷ்ணகிரி மாவட்டம், ஆலப்பட்டி அருகே உள்ள மூங்கில்நத்தம் கிராமத்தை சேர்ந்த மாதையன் (வயது38). இவரது மனைவி சித்தம்மா.

இந்த நிலையில் மாதையன் ராயக்கோட்டை அருகே உள்ள போடம்பட்டி இருளர் காலனியில் உறவினர் வீட்டில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார்.

மனைவி வேறு ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு சென்று விட்டதால் மனவிரக்தியில் இருந்த மாதையன் போடம்பட்டி ஏரி வேப்பமரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

இது குறித்து ராயக்கோட்டை போலீஸ் சப்- இன்ஸ்பெக்ட்டர் ரகுநாதன் வழக்குபதிவு செய்து விசாரனை செய்து வருகிறார்.

Tags:    

Similar News