உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் பேசிய போது எடுத்த படம். 

கடையநல்லூர் நகரின் முக்கிய வீதிகளில் நகராட்சி சார்பில் சி.சி.டி.வி. காமிரா பொருத்தப்படும்-நகர் மன்ற கூட்டத்தில் தகவல்

Published On 2023-11-01 08:42 GMT   |   Update On 2023-11-01 08:42 GMT
  • கூட்டத்தில் கண்ணன், முருகன் உள்பட 28 நகர்மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
  • நகரில் பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் கொள்ளை சம்பவம் நடைபெற்று வருகிறது.

கடையநல்லூர்:

கடையநல்லூர் நகராட்சியின் சாதாரண கூட்டம் தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் தலை மையில் நடந்தது.

நகர் மன்ற துணைத் தலைவர் ராசையா, ஆணை யாளர் சுகந்தி, பொறியாளர் முகைதீன் அப்துல் காதர், மே லாளர் சண்முகவேலு, சுகாதார அலுவலர் பிச்சை யா பாஸ்கர், உதவி பொறி யாளர் கண்ணன், சுகாதார ஆய்வாளர் சிவா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்கள் கண்ணன், முருகன், முகைதீன் கனி, அ.தி.மு.க. உறுப்பினர் பூங்கோதை கருப்பையா தாஸ், எஸ்.டி.பி.ஐ. உறுப்பினர் யாசர்கான் உட்பட 28 உறுப்பி னர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது எஸ்.டி.பி.ஐ. உறுப்பினர் யாசர் கான் கூறுகையில், நகரில் பல்வேறு பகுதிகளில் இரவு நேரத்தில் பூட்டிக் கிடக்கும் வீடுகளில் தொடர்ந்து பூட்டை உடைத்து கொள்ளை சம்பவம் நடைபெற்று வருகிறது.

இதனை தடுக்கும் விதத்தில் நகரில் உள்ள முக்கிய வீதியான மணிக் கூண்டு, பஸ் நிலையம், மேலக்கடைய நல்லூர் பூங்கா, மாவடிக்கால், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் நகராட்சி சார்பில் சி.சி.டி.வி. காமிராக் களை பொருத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு பதில் அளித்த நகர்மன்ற தலைவர் மூப்பன் ஹபீபுர் ரஹ்மான் காவல் துறை, நகராட்சி அதிகாரி களின் ஆலோசனைகளை பெற்று நகரின் முக்கிய பகுதிகளில் சி.சி.டி.வி. காமி ராக்கள் பொருத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றார்.

அதன் பின்னர் நகராட்சி பகுதிகளில் அதிக அளவு தெருநாய்கள் சுற்றி திரிவ தால் அதனை கட்டுப் படுத்துகின்ற விதத்தில் நகரில் ரூ.19 லட்சம் மதிப் பீட்டில் தெரு நாய்களுக்கு கருத்தடை மையம் கட்டுவதற்கான கட்டுமான பணிகள் உட்பட 50 தீர்மானங்களும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Tags:    

Similar News