உள்ளூர் செய்திகள்

டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய காட்சி.

பாளை ஆயுதப்படை மைதானத்தில் வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு 30 குண்டுகள் முழங்க மரியாதை- டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் பங்கேற்பு

Published On 2023-10-21 14:48 IST   |   Update On 2023-10-21 14:48:00 IST
  • அக்டோபர் மாதம் 21-ந்தேதி காவலர்கள் நினைவு தினம் கடை பிடிக்கப்படுகிறது.
  • 189 பேருக்கு மரியாதை செலு த்தும் நிகழ்ச்சி மாவட்ட ந்தோறும் இன்று நடைபெற்றது.

நெல்லை:

ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 21-ந்தேதி காவலர்கள் நினைவு தினம் கடை பிடிக்கப்படுகிறது. இந்த நாளில் பணியின்போது வீர மரணம் அடைந்த போலீசாருக்கு மரியாதை செலுத்தப்படும்.

அந்த வகையில் நாடு முழுவதும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31-ந்தேதி வரை பணியின் போது உயிரிழந்த வர்களுக்கு இன்று வீர வணக்கம் செலுத்தப்பட்டது. அதன்படி தமிழக காவலர்கள் 3 பேர் உட்பட மொத்தம் 189 பேருக்கு மரியாதை செலு த்தும் நிகழ்ச்சி மாவட்ட ந்தோறும் இன்று நடைபெற்றது.

இதனை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் பாளை ஆயுதப்படை மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் காவலர்கள் நினைவு சின்னம் முன்பாக 30 குண்டுகள் முழங்க வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நெல்லை சரக டி.ஐ.ஜி.யும், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனருமான (பொறுப்பு) பிரவேஷ்குமார் கலந்து கொண்டு மலர்வ ளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

அதேபோன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பர சன், மாநகர போலீஸ் துணை கமிஷ னர்கள் தலைமையிடம் அனிதா, கிழக்கு மண்டலம் ஆதர்ஷ் பசேரா, மேற்கு மண்டலம் சரவணக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டு வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

Tags:    

Similar News