உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட பூமிகா.

சிதம்பரம் கோவில் விழாவிற்கு வந்த மூதாட்டியிடம் 6 பவுன் தங்க நகை பறிப்பு: பெண் கைது

Published On 2023-01-08 07:32 GMT   |   Update On 2023-01-08 07:32 GMT
  • ஒரு மர்ம ஆசாமி இவரது கழுத்தில் இருந்த ரூ.2லட்சம் மதிப்பிலான 6 பவுன் தங்கச் செயினை திருடிச் சென்று விட்டார்.
  • தனது பெயர் பூமிகா என்றும், சேலம் ஒன்றாவது வார்டு, 5 வது ரோட்டில் வசிப்பதாகவும் கூறினார்.

கடலூர்:

சிதம்பரம் நடராஜர் கோவிலில் நேற்று முன்தினம் ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதில் பல்வேறு பகுதியை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று நடராஜரை தரிசித்தனர். அதன்படி செங்கல்பட்டு மேட்டுத் ெதருவைச் சேர்ந்த ஹேமாவதி (வயது 81) தனது உறவினர்களுடன் ஆருத்ரா தரிசன விழாவில் கலந்து கொண்டார். அங்கு கூட்ட நெரிசலில் ஒரு மர்ம ஆசாமி இவரது கழுத்தில் இருந்த ரூ.2லட்சம் மதிப்பிலான 6 பவுன் தங்கச் செயினை திருடிச் சென்று விட்டார். இது தொடர்பாக அவர் அளித்த புகாரின் பேரில் சிதம்பரம் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் கோவிலுக்குள் சென்றனர். அங்குள்ள சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்த போது, சுமார் 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ஹேமாவதியின் கழுத்தில் இருந்த செயினை திருடும் காட்சி பதிவாகியிருந்தது.

இதிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை வைத்து அந்த பெண்ணை போலீசார் தேடுகின்றனர். அப்போது அவர் சிதம்பரம் நடராஜர் கோவில் அருகில் நின்று கொண்டிருப்பதை கண்ட போலீசார் அவரை சுற்றிவளைத்து கைது செய்தனர். அவரிடமிருந்த 6 பவுன் தங்கச் செயினை பறிமுதல் செய்த போலீசார் மூதாட்டி ஹேமாவதியிடம் வழங்கினர். விசாரணையில், தங்கச் செயினை பறித்தவர் தனது பெயர் பூமிகா என்றும், சேலம் ஒன்றாவது வார்டு, 5 வது ரோட்டில் வசிப்பதாகவும் கூறினார். இது போல ஒரு முகவரி இருக்குமா என்று சந்தேகமடைந்த போலீசார் பூமிகாவிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News