உள்ளூர் செய்திகள்

கஞ்சா பதுக்கி விற்ற 6 பேர் கைது

Published On 2023-01-22 09:14 GMT   |   Update On 2023-01-22 09:14 GMT
  • மோட்டார் சைக்கிள், கார் பறிமுதல் செய்யப்பட்டது
  • 4 கிலோ கஞ்சா பறிமுதல் செய்தனர்.

சரவணம்பட்டி

கோவை கணபதி அடுத்த மணியகாரம்பாளையம் பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக சரவணம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

கிழக்கு உதவி கமிஷனர் பார்த்திபன் மேற்பார்வையில் சரவணம்பட்டி சட்டம் ஒழுங்கு இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் குற்ற பிரிவு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமை–யில் சப்-இன்ஸ்பெக்டர் செல்லமணி, போலீஸ்கா–ரர்கள் தினேஷ், நந்தகுமார் பிரகாஷ் ஆகியோர் அடங்கிய போலீசார் மணியகாரம்பாளையம் எம்.கே.பி.காலனி லட்சுமி நகரில் உள்ள ஒரு வீட்டில் திடீர் சோதனை செய்தனர்.

அப்போது அங்கு கஞ்சா சிறு, சிறு பொட்டலங்களாக பேப்பரில் வைக்கப்ப ட்டிருந்தது. இதுகுறித்து நடத்திய விசாரணையில் கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக இங்கு பதுக்கி வைத்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கஞ்சா விற்ற மணியகாரம் பாளையம் மாணிக்கவாசகம் நகரை சேர்ந்த போண்டா என்ற ஜீவானந்தம்(வயது21), மேடி என்ற கார்த்தி(23), உடையாம்பாளையம் சபரி நகரை சேர்ந்த சிவ பிரசாத்(24), சின்ன வேடம்பட்டி திருமலை நகரைச் சேர்ந்த பூனை என்ற அருண்குமார்(20), கணபதி செக்கான் தோட்டத்தை சேர்ந்த மனோஜ்(26), மணியகாரம் பாளையம் பாரதியார் பகுதியை சேர்ந்த சந்தோஷ்(25) ஆகிய 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிள் மற்றும் சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News