உள்ளூர் செய்திகள்

பனை விதைகள் நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களை படத்தில் காணலாம்.

மத்தளம்பாறை அருகே குளக்கரையில் பா.ஜ.க. சார்பில் 500 பனை விதைகள் நடும் நிகழ்ச்சி

Published On 2023-02-13 14:37 IST   |   Update On 2023-02-13 14:37:00 IST
  • செங்குளம் கரையில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
  • பனை உள்ளிட்ட மரங்களை வளர்க்க வேண்டும் என ஆனந்தன் பேசினார்.

தென்காசி:

தென்காசி மாவட்டம் மத்தளம் பாறை ஜோஹோ மென்பொருள் நிறுவனத்திற்கு எதிரே அமைந்துள்ள செங்குளம் கரையில் பனை விதைகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. தென்காசி மாவட்ட பா.ஜ.க. சார்பில் 500 பனை விதைகள் நடப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தலைவர் மாரியப்பன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில துணை தலைவர் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு ஆனந்தன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

பின்பு பனை என்பது நம் மண்ணின் மரம் மட்டுமல்ல கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தின் முக்கியமான அங்கம்.பனை, முருங்கை, பலாமரம் உள்ளிட்ட மண்ணின் பாரம்பரிய மரங்களை பேணி வளர்க்க வேண்டும் என ஆனந்தன் பேசினார். மாவட்ட துணை தலைவர் பால்ராஜ், ஐடிவிங் மாவட்ட தலைவர் ரெங்கராஜன், தங்கமுதலாளி, சங்கரநாராயணன், காளிமுத்து, சுப்புராஜ்,மாரிக்கனி, குமார் ராஜ், முரளிதரன் மற்றும் ஐடிவிங் மாவட்ட செயலாளர் முருகன் உள்ளிட்டோர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

Tags:    

Similar News